நெடுந்தீவு கிழக்கு ஆலமாவன பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்ஷவம் 2025 ஜனவரி 04 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 10 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ள திருவிழாக்களில் ஜனவரி 11 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு வேட்டைத் திருவிழா ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதுடன் ஜனவரி 12 ஞாயிறு பகல் 11.00 மணிக்கு தேர்த்திருவிழாவும், மறுநாள் (டிசம்பர் 13) காலை 9.00 மணிக்கு சமுத்திர தீர்த்தோற்சவமும் , இரவு கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.