நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுப் பிரிவினால் இன்றைய தினம் (மே 3) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகள் நெடுந்தீவுப் பிரிவு தலைவர் எ. அருந்தவசீலன் மற்றும் உறுப்பினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க வித்தியாலயம், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம், நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயம், நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கே இன்றையதினம் வழங்கப்பட்டது.

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணப்பொதிகள் இன்றுடன் வழங்கி முடிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article