நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஏற்பாட்டில் இன்று(மே 18) மாலை நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள தூய வேளாங்கன்னி ஆலயத்தில் அருட்பணி சோபன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நினைவுச்சுடரினை வலிசுமந்த தாயார் ஏற்றிவைக்க தொடர்ந்து ஏனையோரும் மலர் அஞ்சலி செலுத்தி நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலித்தனர்.

அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு இந்த நிகழ்வில் அஞ்சலி செலுத்தியதுடன் நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் வழங்கப்பட்டது.

Share this Article