நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது நடவடிக்கையின் போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த கடற்றொழிலாளர்கள், நேற்று (செப.்ரெம்பர் 14) மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

Share this Article