நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் கலந்துரையாடலுக்கு நெடுந்தீவைச் சேர்ந்த பல்கலை மாணவர்களுக்கும் அழைப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிறப்புக் கலந்துரையாடலில் நெடுந்தீவைச் சேர்ந்த பல்கலை மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் வெளிமாவட்ட அங்கத்தவர்களுக்கான சிறப்புக் கலந்துரையாடல் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கத்தில் (Thanthai Chelva Auditorium – No- 114, Rajendra Prasad Road, Jaffna) நடைபெறவுள்ளது.

முன்னதாக இந்தக் கலந்துரையாடல் அரியாலை, ஆறுதல் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அங்கத்தவர்களது போக்குவரத்தினை இலகுவாக்கும் வகையில் யாழ் நகரை அண்டிய இடத்திற்கு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசேட கலந்துரையாடலில் நெடுந்தீவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் மற்றும் க. பொ. த. உயர்தரம், சாதாரண தரம் பரீட்சை எழுதிய மாணவர்களையும் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு.:-+94741612446

Share this Article