2023 ஆண்டிற்கான நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் வெளிமாவட்ட அங்கத்தவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல் எதிர்வரும் 27 ஆம் திகதி மு.ப 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலை 55/1, ஸ்ரான்லி கல்லூரி ஒழுங்கை ஆறுதல் அமைப்பு அலுவலகத்தில் இந்த சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மேற்படி வியம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளமையால் அதில் அனைவரையும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.
கலந்துரையாடும் விடயங்கள்;
1) நிறுவனமயமாக்கலின் உறுதித்தன்மை முன்னெடுத்தல்
2) நெடுந்தீவின் அபிவிருத்தியின் முன்னெடுப்பும், திட்டமிடலும்.
3) ஐந்து ஆண்டு திட்டமிடல் ஒன்றிற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்
4) நெடுந்தீவிற்கு வெளியில் சர்வதேச, தேசிய அரச்சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தல்.
5) கோரிக்கைகள், அதன் முன்னெடுப்புக்கான வழிகாட்டல்.
6) மாவட்டச் செயலகத்தில் பதிவிடல் மற்றும் வேறுநிறுவனங்களின் உதவியைப் பெற்று எமது பகுதிகளுக்கு வழங்குதல்.
7) பாடசாலைகளின் அபிவிருத்திக்கான அரச கட்டமைக்கப்பட்ட செயற்திட்டங்களை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
8) வேறுவிடயங்கள்.