நெடுந்தீவு அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக நாளை கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவின் சமூகப் பணிகள் தொடர்பாக உள்ளூர் சிவில் சமூக அமைப்புக்களுடன் நாளை (ஓகஸ்ட் 4) வெள்ளிக்கிழமை 10 மணியளவில் கலந்துரையாடல் ஒன்று 0ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் பங்குகொண்டு நெடுந்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் கலந்துரையாடல் நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும், அதன்பின்னர் விவசாயத்துறையினருடன் நல்வாழ்வு நம்கையில் என்னும் விவசாயச் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறும் என்றும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு அறிவித்துள்ளது.

Share this Article