நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு: பசுமை சக்தித் தீவுகளாக மேம்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளை ‘பசுமை சக்தித் தீவுகளாக’ (Green Energy Islands)மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

தற்போது இத்தீவுகளில் நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy System – HRES) திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப்படவுள்ளது.

எரிசக்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment