கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளைப் பரிசோதிப்பதற்கான 36 புதிய கவுண்டர்கள்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் பயணிகள் முனையத்தின் கொள்ளளவை விரிவுபடுத்தும் தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

M/s Maga Engineering (Pvt) Ltd நிறுவனத்திற்கு இந்த திட்டத்தினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வசதி

விமான நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பயணிகளின் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் வசதிகளை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட உள்ளது. அத்துடன், அதில் பயணிகளைப் பரிசோதிப்பதற்கான 36 புதிய கவுண்டர்களை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் முனையத்திலிருந்து நேரடியாக விமானங்களுக்கு செல்வதற்கான 06 புதிய நுழைவாயில்களும் இதன் கீழ் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment