நெடுந்தீவுப் படுகொலைக்கு ஈழ மக்கள் ஐக்கிய முன்னணி கடும் கண்டனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பாதுகாப்புப் படைகளின் அதீத பாதுகாப்பு வலயத்தினுள் அதன் வாயிலில் நடந்தேறியுள்ள எமது மக்களின் கொலைகளை ஈழ மக்கள் ஐக்கிய முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் நெல்சன் அவர்கள் வன்மையாகக் கண்டிக் கின்றார்..!

நெடுந்தீவு மண்ணின் பாதுகாப்பு என்பது யுத்தம் முடிந்து 14 வருடங்களாகியும் சிவில் நிர்வாகம் நடப்பதாக சொல்லப்படும் சூழலிலும், ஏதோ அந்நிய தேசத்திற்கு செல்வது போன்று பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த ஒரு பிரதேசமாக இன்றளவும் இருப்பது வேதனையான விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

நீண்டதொரு கடல் பயணம் மேற்கொண்டு கடும் வெயிலில் வரும் மக்கள் இன் றும் இறங்குதுறையில் வரிசையில் வரவழைக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப் பட்டே நெடுந்தீவினுள் அனுமதிக்கப்படுகின்றார்கள். அல்லது வெளியேற அனு மதி கிடைக்கின்றது.

இவ்வாறான சூழலில் நடந்துள்ள இக் கொலையின் சூத்திரதாரிகள் எவ்வாறு நெடுந்தீவினிலிருந்து தப்பிக்க முடியும்..! கடற் படையினர். அவர்கள் தம் முகாம், பொலிஸார் பாதுகாப்பதாகச் சொல்லும் நெடுந்தீவு மண்ணில் பல கொலைகளின் சூத்திரதாரிகள் இன்னமும் இனம்காணப்படவில்லை..! அதேபோல் பல களவு களுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறத்தப்படவுமில்லை. நீதிமன்ற த்தினால் தண்டனை வழங்கப்படவுமில்லை..! அனைத்தும் புரியாத புதிராகவே இருக்கின்றன.

ஆகவே இக்கொடூர கொலைக்குற்றவாளிகள் விரைந்து கைதுசெய்யப்படுவது டன்..! நீதியின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனை வழங்கி நீதி நிலைநாட்டும் வரை ஈழ மக்கள் ஐக்கிய முன்னணியினாராகிய நாம் மக்களுடன் இணைந்து போராடுவோம்.

தோழர் நெல்சன்
யாழ் மாவட்ட அமைப்பாளர் ஈழ மக்கள் ஐக்கிய முன்னணி

 

 

Share this Article