நெடுந்தீவுக் கொலைச் சந்தேகநபர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊற்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

நெடுந்தீவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை நிதிமன்றில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது கொலையாளி நேற்று அடையாளம் காண்பிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

நெடுந்தீவு கொலை வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஊற்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்பட்டார். அடையாள அணிவகுப்பின் போது சந்தேகநபரை நேரில் கண்ட சாட்சிகளான மூவர் நீதிவான் முன்னிலையில் அடையாளம் காண்பித்தனர்.

இக்கொலைகள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article