நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 15 மீனவர்கள் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய 02 இழுவை படகுகளுடன் 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் (ஜூலை 8) இரவு நேரத்தில் இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய இழுவைப் படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படை முயற்சித்தபோது நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இந்தக் கைது இடம்பெற்றது.

இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 2023 ஆம் ஆண்டில், கடற்படையினர் 12 இந்திய வேட்டையாடும் இழுவை படகுகளையும், 74 இந்திய மீனவர்களையும் தீவு கடற்பரப்பில் கைப்பற்றி சட்ட நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share this Article