நெடுந்தீவில் உள்ள 08 முன்பள்ளிகளில் கல்வி பயின்று எதிர்வரும் வருடம்(2025) பாடசாலைக் கல்வியை தொடர உள்ள சுமார் 50 மாணவர்களுக்கானபாடசாலை செல்வதற்கு தேவையான ஆரம்ப கல்வி உபகரணங்கள் வழங்கல் மற்றும் கௌரவித்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (டிசம்பர்28) நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க. த.க. வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
2025 ஆம் ஆண்டு தங்களுடைய கல்வியை தொடர உள்ள மாணவர்களுக்கானகற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வினை யாழ் சென் ஜோண்ஸ் கல்லூரியின் 1992 ஆம் ஆண்டு மாணவர்கள் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் ஊடாக முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை சிறார்களை சூழலுடன் இணைக்கும் செயற்பாடாக கற்றல் உபகரணங்களுடன் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிகழ்வில் ஊரும் உறவும் நிறுவனத்தின் நிர்வாகத்தினர், யாழ் சென் ஜோண்ஸ் கல்லூரியின் 1992 அணி மாணவர்கள், கிராம அலுவலர்கள், கோட்டக்கல்வி அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ,முன்பள்ளிகளின் இணைப்பாளர், முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள்சிறார்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.