நெடுந்தீவில் வீதி அபிவிருத்திக்காகக் கொண்டுவரப்பட்ட பொருள்கள் திருட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதான வீதியின் அபிவிருத்திக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள மூலப் பொருள்கள் களவாடப்பட்டு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள மணல், சல்லி, சீமெந்து, கம்பி ஆகியவையே களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த வீதி அபிவிருத்தி ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்றால் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த நிறுவனத்தினர் நெடுந்தீவுப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் நடவடிக்கையிலேயே பொருள்கள் களவாடப்பட்டு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களவாடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் வீதி அபிவிருத்தி வேலைக்காக நெடுந்தீவில் தங்யிருந்த பணியாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நெடுந்தீவுப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share this Article