நெடுந்தீவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை ஊக்குவிக்க புதிய செயற்றிட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் கீமெடிக்கா நிறுவனம் ஆகியன இணைந்து பெண் தலைமைத்துவ குடும்பங்களில் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் விதமான செயற்றிட்டம் இன்று(மே 9) நெடுந்தீவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் நிரோஷன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

மூலிகைத் தோட்டங்களை அமைத்து அதனை சந்தைப்படுத்துவதன் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கச் செய்தல் இந்த திட்டத்தின் எதிர்பார்ப்பாக முன்மொழியப்பட்டது.

முதற்கட்டமாக ஜெ 1,ஜெ 2 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மகளிர் அமைப்புக்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பூரண ஒத்துழைப்பினை பெற்று இத் திட்டத்தை அங்கு நடைமுறைப்படுத்தவும் இன்றை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள்,மகளிர் அமைப்புப் பிரதிநிதிகள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட நலன் விரும்பிகள் மற்றும் கீமெடிக்கா நிறுவன அதிகாரிகளும் இந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டனர்.

Share this Article