நெடுந்தீவில் பனம்பொருள்சார் தொழில் உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் பனம்பொருள்சார் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான துறைசார்ந்த தொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

நெடுந்தீவு பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலேயே 82 பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் ஒருங்கிணைப்பு செயலாளர், பனை அபிவிருத்திசபை தலைவர்,
பனை அபிவிருத்திசபை முகாமையாளர், மாவட்ட பனை அபிவிருத்திசபை முகாமையாளர், நெடுந்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், ஈழமக்கள் ஜனநாயக கட்சி நெடுந்தீவு நிர்வாக பொறுப்பாளர்
மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

Share this Article