நெடுந்தீவில் பணியாற்றிய தென்னிலங்கை வைத்தியருக்கு மக்கள் பாராட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் கடந்த 18 மாதங்கள் பணியாற்றி வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த வைத்தியர் தரிந்து சூரியாராச்சி வருடாந்த இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

இவர் வைத்தியராக பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே நெடுந்தீவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினதும் வாழ்க்கை நிலையை அறிந்து அவர்களின் குடும்பத்தில் ஒருவராக தன்னைக் காட்டி சிகிச்சை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இவருடைய சேவைக்காலத்தில் வைத்தியசாலையில் சில அபிவிருத்திப் பணிகளை தன்னுடைய ஆளுமையால் செய்துள்ளார். இவரது சேவைக்காக நெடுந்தீவு மக்கள் நன்றி பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article