உலக உணவுத் திட்டத்தின் பங்களிப்பின் கீழ் நெடுந்தீவு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று(ஒக்ரோபர் 23) நடைபெற்றது.
நெடுந்தீவு கிழக்கு பகுதி மத்தி பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கான உணவுப் பொருட்களான கடலைப்பருப்பு மற்றும் மரக்கறி எண்ணெய் என்பன நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மொத்தவிற்பனை களஞ்சியத்தில் வைத்தும் மேற்குப்பகுதி மக்களுக்கு மேற்கு நெழுவினி விநாயகர் ஆலய அன்னதான மண்டபத்தில் வைத்தும் இன்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உலக உணவு திட்டத்தின் பிரதிநிதிகள், யாழ் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் நெடுந்தீவு பல நோ. கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் கிராம அலுவலர்கள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.