நெடுந்தீவு சுகாதார பரிசோதகர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடம்பிகள் உருவாகும் வாய்ப்புக்கொண்ட கிணறுகளில் பிலாப்பியா மற்றும் கப்பீஸ் மீனினங்கள் இன்று (மார்ச் 22) விடப்பட்டன.
பொதுச்சுகாதார பரிசோதகர் ஜெனற் ஜான்சனின் ஏற்பாட்டில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்களின் வீடுகள் மற்றும் பொதுஇடங்களிலுள்ள நீர்நிலைகளிலேயே மீனினங்கள் விடப்பட்டன.
இந்த வேலைத் திட்டத்தில் வேலணை மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகரும் இணைந்திருந்தனர்.