நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவையினை வழங்கிவரும் சுற்றுலா தொடர்பான சேவை வழங்குனர்களுக்கு வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் திறன்விருத்திக்கான பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று (நவம்பர் 22) நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் மா. பிரதீபன், வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ. பத்திநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் , நெடுந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர், யாழ் – போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி, நெடுந்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டதுடன் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், சிறிய மற்றும் பெரிய பேருந்து ஓட்டுநர்கள், டக்சி சாரதிகள் (மகிழுந்து ஓட்டுநர்கள்) சுற்றுலா சார்ந்த கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த உணவகங்கள் மற்றும் தங்குமிட உரிமையாளர்கள் , கடல்சார் விளையாட்டுக்களை வழங்குபவர்கள், சுற்றுலா சேவை வழங்குனர்கள் என சுமார் 45 பயிறரசியாளர்களும் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வினை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு சேவையினை வழங்கிவருவோருக்கான பயிற்சிக் கருத்தரங்கு இன்று மாலை வரை இடம்பெற்றதுடன் நாளைய தினமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.