சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்குடன் சேவை வழங்குநர்களுக்கு திறன் விருத்திப் பயிற்சி நெறி முன்னெடுக்கப்படவுள்ளது என்று வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தெரிவித்தார்.
வட மாகாண சுற்றுலாப் பணியகமானது நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுற்றுலாத்துறை சார்ந்த சேவை வழங்குநர்களில் ஆர்வமுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், சிறிய மற்றும் பெரிய பேருந்து ஓட்டுநர்கள், டக்சி சாரதிகள் (மகிழுந்து ஓட்டுநர்கள்) சுற்றுலா சார்ந்த கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த உணவகங்கள் மற்றும் தங்குமிட உரிமையாளர்கள் (Homestay உட்பட), கடல்சார் விளையாட்டுக்களை (Water Sport provider) வழங்குபவர்கள், திறன் விருத்திக்கான இலவசப் பயிற்சி நெறி ஒன்றினை நவம்பர் மாாதம் நான்காம் வாரம் நெடுந்தீவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இதில் தாங்கள் பங்குபற்றுவதன் மூலம்-
தங்களின் சேவையின் தரத்தை அதிகரிப்பதற்கான அறிவும், ஆலோசனையும்.
சுற்றுலாப் பொலிஸ், போக்குவரத்துப் பொலிஸ் மற்றும் சுகாதார பரிசோதகரின் ஆலோசனைகள்.
சக தொழில் முயற்சியாளர்களின் அனுபவப் பகிர்வு மற்றும்
சுற்றுலாப் பணியகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை, ‘Tourist Friendly Service Provider’ sticker
மேலும் பல அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பு- பயிற்சி நெறியின் ஆரம்ப நாளன்று பின்வரும் ஆவணங்களுடன் சமூகமளிக்கவும்.
நீல நிற பின்னணியுடன் கூடிய புகைப்படம்
வாகன ஃ வியாபார பதிவுப் புத்தகப் பிரதி
தேசிய அடையாள அட்டைப் பிரதி
வாகன ஓட்டுநர் உரிமை பிரதி (சாரதிகளுக்கு மட்டும்)
பயிற்சி நெறியில் கலந்துகொள்ள ஆர்வமுடையவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
தொலைபேசி எண் – 021 221 7311