நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் நெடுந்தீவு பிரதேச சுய உதவிக் குழுக்களின் இணை ஏற்பாட்டில், சர்வதேச மகளிர் தின விழா – 2025 இன்றையதினம் (மார்ச் 10) நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி. நிவேதிகா கேதீசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
மேலும், நெடுந்தீவு பங்குத் தந்தை அருட்பணி ப. பத்திநாதன் அடிகளார், இந்துமத குரு பிரம்மஸ்ரீ புவனேந்திர சர்மா, மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது நெடுந்தீவு பிரதேச மகளீர் அமைப்புகளின் உறுப்பினர்களால் கலை நிகழ்ச்சிகள் ஆர்வமுடன் வழங்கப்பட்டன. மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.