நெடுந்தீவில் கொல்லப்பட்ட மூதாட்டியின் இறுதிக்கிரியை நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுக் கொலைச் சம்பவத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 100 வயது மூதாட்டியான கனகரத்தினம் பூரணம் என்பவர் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 27) உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இன்று (ஏப்ரல் 29) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

116|02 இராசாவின் தோட்ட வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இன்று மாலை 4.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரது இறுதிக் கிரியைகள் நாளை காலை 8.00 மணிக்கு இடம்பெற்று தகனக் கிரியைக்காக கோம்பயன் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

 

Share this Article