நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடற்கூற்றுப் பரிசோதனை நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் நடந்த கொலைச் சம்பவத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 100 வயதுடைய கனகரட்ணம் பூரணம் என்பவர் நேற்று மாலை(ஏப்ரல் 27) உயிரிழந்துள்ளார்.

இவரது பிரேதப் பரிசோதனை நாளைய தினம் இடம்பெறவுள்ளதுடன் அதன்பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரத்தை அறிந்து கொள்ள எமது இணையத் தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Share this Article