நெடுந்தீவில் கொலையுண்ட உறவுகளுக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக விசேடமாக பிரார்த்திக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலய கொடியேற்றமானது பக்திபூர்வமாக இன்றைய தினம் (மே 1) இடம்பெற்றது.

இன்று மாலை திருச்செபமாலை தியானத்தை தொடர்ந்து பற்றிமா அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலியை கிளரீசியன் துறவற சபையின் அருட்பணியாளர் அ.அபிலஸ் அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுத்தார்.

மறையுரையை அமல மரித்தியாகிகள் துறவற சபையின் அருட்பணியளர் பி.ஜோகராஜ் அடிகளார் வழங்கினார்.

தொழிலாளர் தினமாகிய இன்றைய நாளில் தீவினுடைய அனைத்து தொழில் வழங்களுக்காகவும் அனைத்து தொழிலாளர்களுக்காகவும் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஊரின் உறவுகளின் ஆன்ம இளைப்பாறுதலுக்காகவும் விசேடமாக பிரார்த்திக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Share this Article