நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட மூவர் பிணையில் விடுவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் பிரதான வீதி அபிவிருத்திக்கென கொண்டுவரப்பட்ட மூலப்பொருட்களை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் நேற்று (மே 6) பொலிஸாரால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கொங்கிரீட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட மணல், சல்லி, சீமெந்து, கம்பி என்பவற்றை திருடி விற்பனை செய்தமை தொடர்பாக வீதி வேலைக்கென நெடுந்தீவில் தங்கியிருந்த வெளிமாவட்ட பணியாளர்கள் 03 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Article