நெடுந்தீவு பிரதான வீதியின் கிளிஞ்சவேம்படி பகுதியால் பயணித்தோரை இன்று (ஜூலை 15) மாலை பெருங்குளவிகள் கொட்டியதினால் கைக்குழந்தை மற்றும் 4 பெண்கள் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கிளிஞ்சவேம்படி பகுதியின் காணியில் உள்ள பனை மற்றும் குடியருப்பில்லாத வீடு என்பவற்றில் இருந்த பெருங்குழவிக் கூடு கலைந்ததினால் பிரதான வீதிவழியாக சென்றோரை கொட்டியுள்ளது.
குளவிக் கொட்டுக்கு இலக்காகியோரை உடனடியாக அப்பகுதி இறைஞர்கள் அருகிலிருந்த வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
உடனடியாக அவர்களுக்கான சிகிச்சையினை வைத்தியசாலையினர் வழங்கியதுடன் சிலர் தற்போது விடுதியில் தங்க சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆபத்தினை விளைவிக்கும் வகையில் இருந்த குளவிக் கூடுகள் அப்பகுதி இளைஞர்களால் இன்று மாலையே தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.