நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்துடன் இணைந்து வாலிபர் அபிவிருத்தித்திட்டம், தென்னிந்தியத் திருச்சபை சாலோம் நகர், புதுமுறிப்பு – கிளிநொச்சி, ஆகிய நிறுவனங்கள் இணைந்து நெடுந்தீவின் குயின்ரவர் பகுதியில் பனம் விதைநடுதலும் அதனை அண்டிய கடற்கரையில் காணப்பட்ட பொலித்தீன்களை சேகரிக்கும் நிகழ்வும் கடந்த செப். 19 அன்று இடம்பெற்றது.
குயின்ரவர் – வரலாற்று சுற்றுலா தளமாக உள்ள கடற்கரைப் பகுதிகள் அதிகபொலித்தீனால் நிறைந்து காணப்பட்டமையால் அவற்றை சுத்தம் செய்து சுற்றுலாபயணிகளிற்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் திட்டதின் கீழ் இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.
நெடுந்தீவில் ஊரும் உறவும் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 5 ஆண்டுசெயற்திட்டத்தில் ஒரு இலட்சம் பனம் விதைகளை நாட்டுதல் என்னும்செயற்பாட்டின் கீழ் கடந்த ஆண்டின் இறுதியில் ஒரு தொகுதி பனம் விதைகளைசண்ணான் குளப்பகுதியில் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டில் 200 பனம் விதைகள் கடந்த வியாழன் அன்று ஊரும் உறவும் நிறுவனத்துடன் இணைந்து வாலிபர் அபிவிருத்தித் திட்டம், தென்னிந்தியத் திருச்சபை சாலோம் நகர், புதுமுறிப்பு கிளிநொச்சி, ஆகியனகுயின்ரவர் சிறப்பாக மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவின் 4 பகுதி கடற்பிரதேசங்களும், வெளிப்பிரதேசத்தில் பயன்படுத்தும்பொலித்தீன் கழிவுகளால் நிரம்பிக்காணப்படுகின்றது இதனை துப்பரவு செய்யும்வகையில் நெடுந்தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள குயின்ரவர் பகுதியில் இப் பணி ஆரம்பித்து வைக்கப்டதாக தெரியவருகின்றது.
இந்நிகழ்வில் நெடுந்தீவு ஊரும் உறவின் தலைவர், இணைப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் வாலிபர் அபிவிருத்தித் திட்டம், தென்னிந்தியத்திருச்சபை சாலோம் நகர், புதுமுறிப்பு கிளிநொச்சி அமைப்பின் இணைப்பாளர், அதன் பணியாளர்கள், அதன் அங்கத்தவர்கள் என சுமார் 50 பேர் கலந்துசிறப்பித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.