கடலில் காணாமல் போன ஆசிரியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வல்லிபுரக் கோவில் கடற்தீர்த்த உற்சவத்தின் போது கடலில் மூழ்கி காணாமல் போன வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியரின்  சடலம் மீட்கப்பட்டது.

இந்தச் சடலம் இந்தியக் கடல் எல்லையில், வடமராட்சி கற்கோவள பகுதிக்கு அருகில், மீனவர்களால் இன்று (செப்21) கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த வாரம், வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்த உற்சவத்தின் போது, குறித்த ஆசிரியர் கடலில் நீராடியபோது காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Share this Article