நெடுந்தீவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கள்ளை விற்பனை செய்வதற்கு தேவையான தவறணை இல்லாமையினால், உற்பத்திகளுக்கு உரிய சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதுடன், சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் ஏதுவான நிலையை ஏற்படுத்துவதால் கள்ளு விற்பனை நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று (ஜூன் 22) நடைபெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அங்கிகரிக்கப்பட்ட முறையில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக விற்பனை நிலையம் இன்மையால் சீவல் தொழிலாளர் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
வீடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற போது மதுவரி திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட நடவடிக்கைகள் மற்றும் வீதியால் கொண்டு செல்லப்படுகின்ற கள்ளுக்கு அனுமதி இன்மையால் கைது செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கின்ற சந்தர்ப்பங்களை தவிர்க்கும் முகமாக இத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.