கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சித்திட்டத்திலும் நெடுந்தீவுபிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டிலும் தேசிய கலை இலக்கிய விழா 2024 நிகழ்வுகள் கடந்த வாரம் நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களின்தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலாசாரஅலுவல்கள் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட கலாசார உத்தியோகத்தர்இ.கிருஷ்ணகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு கோட்டக்கல்விஅலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கலைவாணி மோகன்ராஜ்அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டுப் பிரிவின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான வலுவூட்டல் கருத்திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்களும், பிரதேசமட்டத்தில் இடம்பெற்ற கலை இலக்கிய போட்டிகளில்வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
நெடுந்தீவு றோ.க மகளிர் கல்லூரி மற்றும் நெடுந்தீவு மகாவித்தியாலமாணவிகளின் நடன நிகழ்வுகளும், கலைஞர் கிரகோரி அலோசியஸ் அவர்களின்நெறிப்படுத்தலில் சிறுவர்களால் மேடையேற்றப்பட்ட நல்லாயன் நாட்டுக்கூத்தும்இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.