நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் ஊடாக அற்புதம் அறக்கட்டளைநடாத்தும் நடன வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கான பரதநாட்டிய நிகழ்வும் , சலங்கை பூசையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர்20) இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியிலும் , நெடுந்தீவு சைவப்பிரகாசவித்தியாலயத்திலும் நடைபெற்று வந்த நடன பயிற்சியானது நாளையும் (டிசம்பர்18) நாளை மறுதினமும்(டிசம்பர்19) முழு நாள் பயிற்சியாக நடைபெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர்20) அன்று மாவிலி துறைமுகத்திற்கு அருகில் உள்ளவீரபத்திரப் பிள்ளையார் கோவிலில் காலை 11.00 மணியளவில் சலங்கைபூசையினை நடாத்துவதுடன் மாலை 2.00 மணியளவில் நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் நடன அரங்கேற்றம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை குறித்த தினத்தில் மிருதங்க பயிற்சி வகுப்புக்கான ஆரம்ப நிகழ்வும்இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.