நெடுந்தீவில் அன்பிய வாரத்தை முன்னிட்டு முன்னாயத்தக் கூட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை, எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையான வாரத்தை அன்பிய வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வுக்கான முன்னாயத்தக் கூட்டமானது நேற்றைய தினம்(ஏப்ரல் 10) பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தலைமையில் தூய யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

குறித்த வாரத்தில் ஆன்மீக பணிகளை கிளரீசியன் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரர்கள் ஆற்றவுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் அனைத்து குடும்பங்களையும் அவர்கள் சந்திக்கவுள்ளதாகவும் அன்பியங்களை மையப்படுத்தி செயற்திட்டங்களையும் ஆன்மீக காரியங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article