நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் வந்த சமுத்திரதேவாவின் சுக்கான் உடைவு – பயணிகள் கடலில் அந்தரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிப் பயணித்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்தமையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்துத் தடைப்பட்டது.

சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா, மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது. அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்களின் உதவியுடன், படகு நடத்துனர்கள் சாதுரியமாகச் செயற்பட்டு பயணிகளைப் பாதுகாப்பாக குறிகாட்டுவான் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் காலைநேரப் படகுப் போக்குவரத்துத் தாமதமடைந்தது. அதன்பின்னர் நெடுந்தீவில் இருந்து தனியார் படகு ஒன்று அனுப்பட்டு காலைநேரப் படகுச் சேவை சீராக்கப்பட்டது.

Share this Article