நெடுந்தீவிலிருந்து புறப்பட்ட சமுத்திரதேவாவில் கோளாறு – பயணிகள் சேவை பாதிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி இன்று(செப்ரெம்பர் 10) காலை பயணித்த சமுத்திரதேவா படகின் ஒயில் பம் உடைந்தமையால் நெடுந்தீவிற்கான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

குறிகாட்டுவானில் இருந்து மீள திரும்பவிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற பாதிப்பு காரணமாக நெடுந்தீவுக்கான காலைநேரப் போக்குவரத்துச் சேவைகள் தாமதமாகியுள்ளது.

நெடுந்தீவிலிருந்து தனியார் படகோ அன்றி அரச படகோ அனுப்பப்பட்டு காலை நேர சேவை சீராக்கப்படாமையால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சமுத்திரதேவா படகும் திருத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அதன் பின்னரே சேவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this Article