நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடந்த மாதம் 10ஆம் தேதி நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (டிசம்பர் 03) அவர்கள் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை பரிசீலித்த நீதிவான், 23 இந்திய மீனவர்களுக்கும் 6 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். அதேசமயம், 23 பேரில் 3 பேர் படகோட்டிகளாக இருப்பதனால், அவர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாய் அபராதமும் 6 மாத சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்க உத்தரவிட்டார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால், 6 மாத சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 3 மாத சிறைத்தண்டனையும் அனுபவிக்கவேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

Share this Article