மாணவர் ஒன்றியத்தினருடன் நடத்திய சந்திப்புக்கமைய இன்று அதிகாலை 4 மணியளவில் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா உணவுத் தவிர்ப்பு இடம்பெற்ற கொட்டகை பகுதிக்கு சென்று மாணவர்களை சந்தித்தார்.
மாணவர்களின் கோரிக்கைகளை நான் ஏற்கின்றேன். அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டது. அதனால் அனுமதி பெற்று அதனை மீள நானே முன் நின்று நடாத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த துணைவேந்தர் சந்தித்து வாக்குறுதியை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது..
அதன் படி இன்று காலை சுபவேளையில் முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபி கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, தூணைவேந்தர் தலைமையில் மாணவர்களின் பங்குபற்றலோடு இடம்பெற்று வருகின்றது.
உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தர் முள்ளிவாய்கால் கஞ்சி கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.