பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நாளை (18/04) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நாளை வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது QR முறைமையைக் கருத்தில் கொள்ளாதிருக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை, இரட்டை இலக்க முறைமை பின்பற்றப்பட்டதுடன், டீசல் வாகனங்களுக்கான QR முறைமை மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.