அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல்களிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் உட்பட மொத்தம் 240 ஈரானியப் பிரஜைகள், இலங்கையிலிருந்து விசேட வானூர்தி மூலம் நேற்று (15/04) ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அமெரிக்காவின் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான IRIS Dena விலிருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், இலங்கையில் தஞ்சமடைந்த IRIS Bushehr போர்க்கப்பலைச் சேர்ந்த 208 மாலுமிகளும் இதில் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் துருக்கிக்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது