தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் (17/04) அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் , விகாரை காணியினை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்நிலையில் முன்னர் அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக , காணி உரிமையாளர்கள் , மற்றும் நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் விகாரை பகுதிக்கு இன்று காலை வருகை தந்திருந்தனர்.
இருந்த போதிலும் , காணிகளை அடையாளம் காட்ட வருமாறு காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பளை பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அவ்விடத்திற்கு காலை 10 மணியளவில் வருகை தந்த மாவட்ட செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் , காணி அளவீடு செய்வதற்கு கொழும்பில் இருந்து விசேட குழு வருகை தர வேண்டும் எனவும் , அதனால் ஒரு மாத கால பகுதிக்குள் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக காணி உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நிலையில் பிக்கு தனக்கு காணி அளவீடு செய்வது தொடர்பில் அறிவிக்கவில்லை என இன்று கூறி அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஆனால் மாவட்ட செயலர் , கொழும்பில் இருந்து விசேட குழு வர வேண்டும். அதன் பின்னரே காணிகளை அளவீடு செய்ய முடியும் என கூறி சென்றுள்ளார்.
இதுவரையில் காணி உரிமையாளர்கள் தான் விகாரை பிரச்சனையை தீர்க்க விரும்பவில்லை என கருத்து கூறி வந்தார்கள். நாம் இன்று காணிகளை அளவீடு செய்ய சம்மத்தித்த போதிலும் பிக்குவின் தலையீட்டால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.