இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், நள்ளிரவு முதல் அனைத்து எரிபொருள் விலைகளையும் உயர்த்தியுள்ளது.
இதன் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 410.00 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 470.00 ரூபாயாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 392.00 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபா 458.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை 265.00 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 10 ரூபாயால் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் தனது விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ரக பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏதுமில்லை என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 392 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 410 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.