நயினாதீவைச் சுற்றி 1000 ஆலமரம் நடுகை தொடக்க நிகழ்வும் பாடல்இறுவெட்டு வெளியீடும்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவைச் சுற்றி 1000 ஆலமரம் நடுகைத் திட்டத்தின் தொடக்க நிகழ்வும்பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெறவுள்ளது.

“அனைவரும் ஒன்றிணைந்து கடலரிப்பைத் தடுப்போம். பிறந்த ஊரையும் பிறந்த மண்ணையும் என்றும் நேசிப்போம்” எனும் தொனிம்பொருளில் எதிர்வரும் ஒக்ரோபர் 05 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் நயினாதீவு 05 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள நயினை மக்கள் அறக்கட்டளை நிலையத்தில் நடாத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் நயினை வாழ் அன்புள்ளங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article