நயினாதீவு வைத்தியசலை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின்  வெளிநோயாளர் பிரிவுக்கான புதியகட்டடத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்தஜயதிஸ்ஸ திறந்துவைத்தார்.

இன்று (ஜூலை 12) காலை இடம்பெற்ற குறித்த திறப்புவிழா நிகழ்வில்கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர்நாகலிங்கம் வேதநாயகன்,, நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன்ஸ்ரீபவானந்தராஜா , கருணநாதன் இளங்குமரன் மன்றும் யாழ்.பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டிருந்தனர்.

இந்த புதிய கட்டடமானது, புலம்பெயர் தேசத்தில் வாழும் நாயினாதீவு உறவுகள் மற்றும் ஜேர்மன்செஞ்சிலுவைச்சங்க வாறன்டோர்ப் கிளையின் நிதி பங்களிப்பில், யாழ்ப்பாணபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையுடன், இலங்கைகடற்படையின் கட்டுமான பணிகளில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article