நயினாதீவில் போதை ஒழிப்பு செயலமர்வு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட நயினாதீவு பகுதியில் போதைஒழிப்பு தொடர்பான வழிப்புணர்வு செயலமர்வு நேற்றையதினம் ( மே27) நயினாதீவு மகாவித்தியாலய மண்டபத்தில் பி.ப 2.00 மணி – 4.00 மணிவரைஇடம்பெற்றது.

இந் நிகழ்வில் வளவாளராக ஊர்காவற்றுறை  பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்  சு.சதீஸ்காந் மற்றும் குறிகட்டுவான் பகுதி பொலிஸ்உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது போதைப்பொருள் பாவனையும் அதன் விளைவுகள் மற்றும் அதற்குரிய குற்றங்கள், தண்டனைகள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுமார் 80 இளைஞர்யுவதிகள் பங்குபற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article