நயினாதீவில் பெரும் சோகம்; பெற்றோர் உயிரிழந்ததை தொடர்ந்து ஒரே மகளும் மரணம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவில் தந்தை தாய் உயிரிழந்த நிலையில் ஒரே மகளும் நேற்றைய தினம் (ஜூன் 16) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நயினாதீவு 05 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசசூரியர் பவதாரணி வயது 22 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தந்தை மற்று தாய் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்த இளம் பெண் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சுகயீனம்  காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று (ஜூன் 16)  உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் முதலாம் குறுக்குத் தெரு இல -69 பிரதானவீதி யாழ்ப்பாணத்தில் உள்ள மலர்ச்சாலையில் இடம்பெற்று  பூதவுடல் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Share this Article