நயினாதீவில் காணமல்போன இளைஞர் வெளிப்பட்டுள்ளார். !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவில் நேற்றையதினம் (ஏப்ரல்22) கைகலப்பில் ஈடுபட்டவர்கள், தாக்குவதற்காக துரத்திச் செல்லப்பட்டு நேற்றுமுதல் காணாமல் போயிருந்த இளைஞர் சற்றுமுன்  நயினை அம்மன் கோயில் அருகில் இருந்துவெளிப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

நயினாதீவு துறைமுகப்பகுதியில் நேற்று(ஏப்ரல்22) மாலை ஏற்பட்ட தொழில்தகராறினால் , வாய்த்தர்க்கம் வலுவடைந்து அடிதடியாக மாறியுள்ளது. சம்பவத்தில் காணாமல் போன குறித்த இளைஞர் மன்னார் பகுதியை சேரந்தவர் எனவும் நயினாதீவில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டதாக தெரிவருகின்றது.

சம்பவம் தொடர்பில் CCTV பதிவுகளின் படி சம்பவத்துடன் தொடர்புபட்டோர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவரை பொதுமக்கள்  பிடித்து அடைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் சந்தேக நபர்களை கையளிக்க பொதுமக்கள் தயக்கம் வெளியிட்டுவந்த நிலையில் , பொலிஸாருக்கும் , மக்களுக்கும் இடையே ஏற்பட்ட சமரசத்தின் படி பிடித்து வைத்திருந்தவர்களை பொலிசார் கைதுசெய்து  இன்றுமாலை ஊர்காவற்றுறைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில் நயினை அம்மன் ஆலய பகுதியில் இருந்து காணாமல் போன இளைஞர் வெளிப்பட்டுள்ளார்.

இதன்பேரில் ஏற்கெனவே கைது செயயப்பட்டவர்களுடன் , வெளிப்பட்ட இளைஞரையும் கைதுசெய்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டுசென்றுள்னர்.

Share this Article