நடிகா் ரஜனிகாந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு யோசனைகள் மற்றும் தடைகளுக்கு பிறகு ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஏற்கனவே, ஒப்பந்தம் செய்துள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க திட்டமிட்டு, அவர் ஐதராபாத் சென்றார். அங்கு படக்குழுவினருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ரஜினிக்கு கடந்த 22ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நெகட்டிவ் என்ற முடிவு தெரிய வந்தது. இருப்பினும், ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், சென்னை திரும்புவதாக இருந்த அவருக்கு, மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக இருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகள் காரணமாகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏதும் இல்லை எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவக்கப்பட்டுள்ளது.

Share this Article