ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ள நாமல் ராஜபக்சவை தொடர்ந்தும் சிறையில் அடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய சூழலில் பெரும்பாலான மக்கள் நாமல் ராஜபக்சவின் தலைமைத்துவத்தினை எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ராஜபக்சர்களுக்கு எதிரான பழிவாங்கல்களை மேற்கொள்ளும் பொருட்டு நாமல் ராஜபக்சவை தொடர்ந்தும் சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை தோற்கடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய அரசாங்கத்தில் சுதந்திரமான நீதித்துறையை எதிர்பார்க்க முடியாது.
நாட்டில் சட்டத்தை செயற்படுத்துவதில் பாரபட்சமான மற்றும் இரட்டை நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது. மோசடிகளுடன் தொடர்புடைய அரசாங்கத் தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் இலக்கு வைத்து கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.