தேர்தல் சுவரொட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துவிநாயகபுரம்பகுதியில் கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரைக்கான சுவரொட்டி ஒட்டும் போதுநபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (ஒக்.24) இரவு பதிவாகியுள்ளது.

முத்துவிநாயகபுரம் முத்துஐயன்கட்டு பகுதியில் கட்சி ஒன்றிற்கான தேர்தல்சுவரொட்டியை இரவு 11.00 மணியளவில் ஒட்ட முற்பட்டவர் யானைக்காக காணிவேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் இருந்து பாய்ந்த மின்சாரம்தாக்கி உயிரிழந்துள்ளார்.

தகரம் அடித்த குறித்த காணி வேலிக்கு முன்னால் காணி உரிமையாளரால்யானையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மின்சார இணைப்புபோடப்பட்டிருந்தது. இது தெரியாமல் அவரது வேலி தகரத்தில் சுவரொட்டி ஒட்டமுற்பபட்ட போது மின்சாரத்தில் சிக்குண்ட குறித்த நபர் உயிரிழந்துள்ளார்

முத்துவிநாயகபுரம் முத்துஐயன்கட்டு ஒட்டுசுட்டானை சேர்ந்த காசிலிங்கம்லங்காதீபன் (வயது45) என்பவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் ஒட்டுசுடுட்டான் பொலிஸார்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Share this Article