நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து முதன்முறையாக தேசிய மட்ட நீச்சல் போட்டிக்காக செல்லவுள்ள இரண்டு வீரர்களுக்கான செலவீன கொடுப்பனவை நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினர் இன்று(செப்ரெம்பர் 19) ஊரும் உறவும் அலுவலகத்தில் வைத்து வித்தியாலய அதிபரிடம் வழங்கிவைத்தனர்.
நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து க. மனாஸ் , க. கஜீவன் ஆகிய இரு மாணவர்களும் மாகாண மட்ட போட்டியில் தேர்வாகி தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அடிப்படையில் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் 2 வீர்ர்கள், பாடசாலை அதிபர் , ஆசிரியர் மற்றும் பெற்றோர் என 6 பேர் எதிர்வரும் 22 ஆம் திகதி நெடுந்தீவில் இருந்து செல்ல இருப்பதனால், அதற்கான பயணச் செலவு மற்றும் தாங்கும் இடம், உணவு போன்றவற்றுக்கான செலவிற்குரிய நிதியே இன்று கையளிக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரணையினை ஊரும் உறவும் அமைப்பின் உறுப்பினரான நாவரசன் கவிதா குடும்பத்தினர் வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
அண்மையில் இடம்பெற்ற மாகாணமட்ட போட்டில் இவ் இரு வீர்ர்களும்
100 M
க.மனாஸ் (தங்கம்)
400 M
அ.சுஜீபன் (தங்கம்)
200 M
அ.சுஜீபன் (தங்கம்)
க.மனாஸ் (வெள்ளி)
50 M
க.மனாஸ் (வெண்கலம்). வெற்றிகொண்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.